>தொட்டபெட்டா
தொட்டபெட்டா:
கடல்மட்டத்திற்கு
மேல் சுமார் 8640 அடி உயரத்தில்
அமைந்துள்ளது. உதகை ரயிலடியிலிருந்து
10. கி.மீ. தொலைவில் உள்ளது. இதன்
உச்சிவரை செல்ல நல்ல சாலைகள்
உண்டு. இங்குள்ள கண்ணாடி அறையிலிருந்து
இயற்கைக் காட்சிகள் ரசிக்கலாம்.
இங்கிருந்து உதகை, கூனுர்,
வெலிங்டன், குந்தா, கோயம்புத்தூர்
முதலிய இடங்களைப் பார்த்துக்
களிக்கலாம்.இங்குள்ள
தொலை நோக்கியின் மூலம் சிகரத்தை
காணலாம்.புகழ்பெற்ற
மலைச்சிகரம். நீலகிரி மாவட்டத்தில்
உள்ள சிகரங்களிலேயே உயரமானது.
இதன் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக
2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன்
ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப்
ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும்
உள்ளன. இந்தச் சிகரங்களுக்கிடையே
உள்ள பள்ளத்தாக்குதான் உதகமண்டலம்.
ஊட்டியிலிருந்து 8 கி.மீட்டரில்
அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம்
கிழக்கு - தென் கிழக்காக அமைந்துள்ளது.
மேற்கு நிலப் பகுதியில் வடக்கு
தெற்காக நீளும் மலைத்தொடரில்
தொட்டபெட்டாதான் உயரமான சிகரம்.
தொட்டபெட்டா நீலகிரி மாவட்டத்தில்
உள்ள மிக உயரமான மலை ஆகும்.
இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும்.
இது உதகமண்டலத்தில் இருந்து
8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இது ஒரு முக்கியமான சுற்றுலாத்
தலம் ஆகும். இம்மலையின் உச்சியில்
இருந்து சாமுண்டி மலையைப்
பார்க்க முடியும். தொட்டபெட்டா
என்ற சொல்லின் மூலம் கன்னடம்
ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால்
பெரிய, பெட்டா என்றால் மலை.
எனவே பெரிய மலை எனப் பொருள்படும்
படி இது தொட்டபெட்டா என்று
அழைக்கப் படுகிறது.