>தாவரவியல் பூங்கா
1847 ல் நிறுவபட்ட
இந்த Garden இல் பல அரிய தாவரங்கள்
உள்ளன. 20 மில்லியன் வயதுள்ள
அரிய தாவரம் "Fossil
Tree" ஒவ்வொரு
வருடமும் இங்கு மலர் கண்காட்சி
நடைபெறும். பல தாவரங்களைப்
பற்றி ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகளுக்கு
ஏற்ற இடமான இங்கு Dog
Show வும் நடைபெறும்
எங்கு பார்த்தாலும்
மலர்கள்... செடிகள்... மூலிகைகள்...
அரிய வகைத் தாவரங்கள் என கண்ணையும்
கருத்தையும் ஈர்க்கும் இந்தத்
தாவரவியல் பூங்கா 1847-67 ஆம் ஆண்டுகளுக்கு
இடைப்பட்ட காலத்தில் எம்.சி.
ஐவோர் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.
கடல் மட்டத்திலிருந்து 2400 முதல்
2500 அடி வரை உயரத்தில் அமைந்திருக்கும்
இந்த அழகிய தோட்டம் மலைச்சரிவை
ஒட்டி இருக்கிறது. இதன் பரப்பளவு
22 ஹெக்டேர்.