ஏரியை ஒட்டி  அமைந்துள்ள இந்தப் பூங்காவில் பச்சைப் பாய்போல் விரிந்துக் கிடக்கும் புல்வெளி... பூக்களின் போர்வையால் மூடப்பட்டது போல் ஏரியின் நீர்ப்பரப்பெங்கும் மிதக்கும் மலர்க் கூட்டம். சிறிது தூரத்தில் இயற்கை எழில் சூழ நிமிர்ந்து நிற்கும் புனித தோமையர் தேவாலயம் தீப்பெட்டிகளின் வரிசையைப் போல் ஊர்ந்து செல்லும் மலை ரயில் படகுச்சவாரி குதிரைச் சவாரி என சிறுவர்களின் நெஞ்சை கொள்ளை கொள்ளும் அழகிய பூங்கா