1824 ஆம் ஆண்டு இங்கு செயற்கை ஏரி நிறுவப்பட்டது. இங்கு படகு சவாரியும், மினி ரயில், குழந்தைகள் பூங்கா ஆகியவையையும் உண்டு. ஊட்டியின் முதல் ஆணையராக இருந்த ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஏரி. 1823-1825 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த ஏரி இப்போதும் ரம்மியத்தோடு காட்சி அளிக்கிறது. பெடல் படகுகள், ரோ படகுகள், அக்குவா பைக்குகள் போன்றவற்றை இந்த ஏரியில் ஓட்டி மகிழலாம். அதுமட்டுமா... மினி ரயில், டான்சிஸ் கார்கள் என்று குட்டீஸ்களின் குதூகலத்தக்குப் பஞ்சமே இல்லை. தமிழ்நாடு அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் இந்தப் படகு இல்லம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.