>ஊட்டி
பெயர்க்
காரணம்:
உதகமண்டலம்
என்ற பெயருக்கு பல வகைகள்
காரணங்களாக கூறப்படுகின்றன. 'ஒத்தைக்
கல் மந்து'
என்ற பெயரே உதகமண்டலம் ஆயிற்று
என தோதூவர் சொல்கின்றனர். மூங்கில்
காடு இருந்தாலும், நீர் அதிகம்
இருந்ததாலும் இப்பெயர் பெற்றது
என பலவாறு உரைக்கின்றனர்.ஊட்டி
என்றும், உதகை என்றும் அழைக்கப்படும்
உதகமண்டலம் (ஆங்கிலம்: Udhagamandalam)
தென்னிந்திய மாநிலமான தமிழத்தில்
நீலகிரி மலையில் அமைந்த ஊராகும்.
இதுவே நீலகிரி மாவட்டத்தின்
தலைநகரமுமாகும். இது கடல் மட்டத்திலிருந்து
7347 அடி (2239 மீ) உயரத்தில் உள்ளதால்
குளுமையாக உள்ளது. வரலாறு:
12-ஆம் நூற்றாண்டில்
நீலகிரி மலையில் ஹொய்சாளர்களின்
ஆட்சி புரிந்தனர். பின்னர்,
திப்பு சுல்தானின் மைசூர்
இராஜ்ஜியத்தில் ஒரு பகுதி
ஆன உதகமண்டலம் 18-ஆம் நூற்றாண்டில்
ஆங்கிலேயரின் கைக்கு மாறியது.அப்போது
கோயம்புத்தூர் மாவட்டத்தின்
ஆளுனராக இருந்த ஜான் சல்லிவன்
என்பவர், இப்பகுதியின் குளுமையான
தட்பவெட்ப நிலையை விரும்பி
இங்கிருந்த தோடர், இரும்பா,
படுகர் முதலிய பழங்குடியினரிடம்
இருந்து நிலங்களை வாங்கினார்.ஆங்கிலேயரின்
ஆட்சியில் இம்மலைப் பிரதேசம்
நல்ல வளர்ச்சியைக் கண்டது.
வளைந்து நெளிந்து செல்லும்
சாலைகளும், நீலகிரி மலை இரயில்
பாதையும் அமைக்கப்பட்டது.
இதன் காரணமாக உதகை, ஆங்கிலேயருக்கு
கோடைக் காலத் தலைநகரமாக விளங்கியது.
2001-ஆம் ஆண்டுக்
கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின்
மக்கட்தொகை 7,62,141. கல்வியறிவு
81.44%. இது தமிழகத்திலேயே அதிக
கல்வியறிவு பெற்ற மாவட்டங்களுள்
ஒன்று.
இம்மாவட்டத்தில்
பல பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர்.
தோடர் இவர்களுள் குறிப்பிடத்
தகுந்தவர்கள். இவர்கள் தவிர
பணியர்கள், படகர்கள், பெட்ட
குறும்பர், கசவர் ஆகியோரும்
உள்ளனர். கோத்தகிரிப் பகுதிகளில்
கோத்தர் எனும் பழங்குடியினர்
வாழ்கின்றனர்.